முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 9:24 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா முன்னிலையில் இன்று (25) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லாவும் பெயரிடப்பட்டுள்ளதால், பிறிதொரு நீதிபதியை வழக்கிற்கு நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி இன்று (25) உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்