இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ; இந்திய மகளிர் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ; இந்திய மகளிர் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ; இந்திய மகளிர் அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 9:48 am

Colombo (News 1st) மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.

பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது.

16 வயதான ஷபாலி வர்மா 17 பந்துகளில் 39 ஓட்டங்களையும் ஜெமிமா ரெட்ரிகர்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை​யே பெற முடிந்தது.

Murshida Khatun 30 ஓட்டங்களையும் Nigar Sultana 35 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டியில் இந்திய மகளிர் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

லீக் சுற்றில் இந்தியா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்