ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது

ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது

ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 9:23 am

Colombo (News 1st) தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுளளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட – பெங்கிரிவத்தை, பாணந்துறை – பிங்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை 6 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்