17 சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

17 சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

17 சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 4:41 pm

Colombo (News 1st) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவுசெய்யப்படாத, தூர சேவையில் ஈடுபடும் 17 சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்படாத குறித்த பஸ்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சேவையில் ஈடுபடுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தை, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இருந்து இந்த பஸ்கள் இரவுநேர சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பஸ்கள், பயணிகளிடமிருந்து அதிக தொகையைக் கட்டணமாக அறவிடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து குறித்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்