வசந்த கரன்னாகொடவுக்கு 4ஆவது தடவையாகவும் அறிவித்தல்

வசந்த கரன்னாகொடவுக்கு நான்காவது தடவையாகவும் அறிவித்தல்

by Staff Writer 24-02-2020 | 2:39 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெறுப்பேற்ற, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொண்டுவருவமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்குடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த ஆவணங்கள், ஜனாதிபதி ஆணைக்குழுவிடமுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர். இதேவேளை, வழக்கின் 14ஆவது பிரதிவாதியான அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட வீட்டில் இல்லாத காரணத்தால், அவருக்கான அறிவித்தலை வழங்க முடியாமல் போனதாகவும் பொலிஸார் இன்று மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு வலியுறுத்தி நான்காவது தடவையாகவும் வசந்த கரன்னாகொடவுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.