டோகோ தேர்தலில் மோசடி ; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

டோகோ ஜனாதிபதித் தேர்தலில் மோசடி ; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

by Chandrasekaram Chandravadani 24-02-2020 | 3:54 PM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் (Togo) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போலியான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் அமைத்திருந்ததாக அந்நாட்டு எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பதவியிலுள்ள ஜனாதிபதி (Faure Gnassingbe) பவுரே ஞாசிங்பேவிற்கு ஆதரவாக முடிவுகளை மாற்றியமைப்பதற்காக இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை Togo ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற டோகோ ஜனாதிபதித் தேர்தலின் தற்காலிக முடிவுகள் அடிப்படையில், நான்காவது தடவையாகவும் Faure Gnassingbe வெற்றி பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு தமது தந்தையிடமிருந்து பதவியைப் பொறுப்பேற்றமை முதல் இதுவரை Togo ஜனாதிபதியாக Faure Gnassingbe பதவிவகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.