வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு இராணுவ பொலிஸார் உதவி  

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு இராணுவ பொலிஸார் உதவி  

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு இராணுவ பொலிஸார் உதவி  

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 7:02 pm

Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவுவதற்காக இன்று (24) முதல் அமுலாகும் வகையில் இராணுவ பொலிஸார் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கிணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் பிற்பகல் 4 மணி முதல் 7 மணி வரையிலான காலப்பகுதியில் நிலவும் அதிக வாகன நெரிசலை முகாமைத்துவம் செய்வதற்காக பொலிஸாருக்கு இராணுவ பொலிஸார் உதவவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்