மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீர் இராஜினாமா

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீர் இராஜினாமா

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 2:59 pm

Colombo (News 1st) புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில் தமது பதவியை இராஜினாமா செய்வதாக மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் (Mahathir Mohamad) அறிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, இராஜினாமா கடிதத்தை மன்னரிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆளும் கூட்டணியிலிருந்து பிரதமர் மஹதிரின் கட்சியும் வௌியேறுவதாக அந்தக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் மலேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட குழப்பநிலைகள் காரணமாகவும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை காரணமாகவும் இந்தப் பதவிவிலகல் இடம்பெறுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்