புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி திருட்டு: சந்தேகநபர் ஒருவர் கைது

புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி திருட்டு: சந்தேகநபர் ஒருவர் கைது

புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி திருட்டு: சந்தேகநபர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 3:48 pm

Colombo (News 1st) புஸ்ஸல்லாவை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

புஸ்ஸல்லாவை – ஹெல்பொட பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்று சுமார் 4 மணித்தியாலங்களில் புஸ்ஸல்லாவை – ஹெல்பொட பகுதியில் முச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்