பனை ஐஸ்கிரீம் சந்தை அறிமுகம்

பனை ஐஸ்கிரீம் சந்தை அறிமுகம்

பனை ஐஸ்கிரீம் சந்தை அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 3:12 pm

Colombo (News 1st) நாட்டில் பனை நார் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பனை தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் பிரபல்யப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு திட்டமாக பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.

இந்தத் தயாரிப்புக்கு பனை சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், 2 தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த மன்னார் செல்வாரி உற்பத்தித் தொழிற்சாலையில் பனை நார் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்குத் தேவையான பனை நார்கள், உள்ளூரிலேயே உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பனையுடன் தொடர்புபட்ட அனைத்து உற்பத்திகளும் சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்