தேங்காய் செய்கையைத் தாக்கும் புதிய வகை பூச்சியினம்

தேங்காய் செய்கையைத் தாக்கும் புதிய வகை பூச்சியினம்

தேங்காய் செய்கையைத் தாக்கும் புதிய வகை பூச்சியினம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2020 | 9:28 pm

Colombo (News 1st) ஈர வலயத்தில் தேங்காய் மற்றும் இளநீர் செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் வௌ்ளை ஈ எனப்படும் புதிய பூச்சியினமொன்று பரவி வருவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, கண்டி, மாத்தளை, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளில் இந்த பூச்சியினம் பரவி வருவதை அவதானிக்க முடிவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியுடன் கூடிய காலநிலை, மண் மற்றும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் ஈரப்பதன் இல்லாமையே இந்த பூச்சியினம் பரவுவதற்கான காரணம் என தெங்கு ஆராய்ச்சி நிலையம் மேலும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்