கொரோனாவின் அடுத்த பார்வை இலங்கை மீது விழும் அபாயம்

கொரோனாவின் அடுத்த பார்வை இலங்கை மீது விழும் அபாயம்

கொரோனாவின் அடுத்த பார்வை இலங்கை மீது விழும் அபாயம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

24 Feb, 2020 | 12:14 pm

கொரோனா வைரஸ் நாட்டில் பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர், டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவும் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து தென் கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்