உணவக மோதலில் ஒருவர் பலி

உணவக மோதலில் ஒருவர் பலி

by Fazlullah Mubarak 24-02-2020 | 12:16 PM

எல்பிட்டி நகரிலுள்ள உணவகமொன்றில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்த்தர்க்கம் வலுப்பெற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.