பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை அமுல்

வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுல்

by Staff Writer 23-02-2020 | 9:32 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.