உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் இவ் வாரத்திற்குள் நிறைவு – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் இவ் வாரத்திற்குள் நிறைவு – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் இவ் வாரத்திற்குள் நிறைவு – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2020 | 1:38 pm

Colombo (News 1st) கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறிய உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இவ் வாரத்திற்குள் நிறைவுசெய்யப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்பின்னர், கட்சியின் மத்திய செயற்குழு குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

டிலான் பெரேரா, S.B. திசாநாயக்க, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் காமினி விஜித் விஜயமுனி ஆகிய உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, கட்சித் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகளையும் நிறைவுசெய்யவுள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்