ஆட்பதிவுத் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்   

ஆட்பதிவுத் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்   

ஆட்பதிவுத் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்   

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2020 | 11:14 am

Colombo (News 1st) இம்முறை கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த வருடங்களில், தாமதமாக விண்ணப்பங்கள் கிடைத்தமையால் டிசம்பர் மாதம் வரையில் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், தாமதங்களின்றி அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் அனுப்பிவைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 330,000 இற்கும் அதிக பரீட்சார்த்திகள் விண்ணப்பிப்பார்கள் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்