ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது

ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது

ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2020 | 5:03 pm

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பெப்ரவரி 15 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007 இல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், 44 வயதான ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு சமீஷா என்று பெயர் சூட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்