ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு வி​​ஜேதாச ராஜபக்ஸவிற்கு அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு வி​​ஜேதாச ராஜபக்ஸவிற்கு அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு வி​​ஜேதாச ராஜபக்ஸவிற்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2020 | 3:41 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வி​​ஜேதாச ராஜபக்ஸவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் சாட்சியமளிப்பதற்கே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, VPN பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரையும் கணினி அவசர பிரிவினரையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் அமைதி பிரிவின் பதில் மேலதிக செயலாளர் மாலிகா ஷர்மதி பீரிஸ் மற்றும் வௌிவிவகார அமைச்சின் பதில் பிரதி பணிப்பாளர் மஹேஷா பாரதி ஜயவர்தன ஆகியோர் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 70 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

455 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்