கருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி

கருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி

by Staff Writer 21-02-2020 | 4:28 PM
Colombo (News 1st) கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது. போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்ட கருணைக்கொலை சட்டமூலம் நேற்று (20) அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 230 பாராளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் 124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இதற்கு அதரவு தெரிவித்த போதிலும் சமயம் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 2 வருடங்களுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருணைக் கொலைக்கு சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து , லக்ஸம்பேர்க் மற்றும் பெல்ஜியத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.