துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 5:37 pm

Colombo (News 1st) துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

DEFENCE.LK என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கி கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் துப்பாக்கிகளை வைத்திருக்கும் அனைவரிடமும் அதற்கான அனுமதிப்பத்திரம் காணப்படுதல் வேண்டும்.

12 மாதங்களில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாவதுடன், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் அவசியமாகும்.

அண்மையில் வழங்கப்பட்ட சலுகைக் காலப்பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமின்றி காணப்பட்ட 200 துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக மூன்று மாதங்கள் வழங்கப்பட்டன.

வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்