கோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டியிடும் பிரதேசத்தை தீர்மானிக்கவுள்ளதாக சஜித் தெரிவிப்பு

கோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டியிடும் பிரதேசத்தை தீர்மானிக்கவுள்ளதாக சஜித் தெரிவிப்பு

கோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டியிடும் பிரதேசத்தை தீர்மானிக்கவுள்ளதாக சஜித் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 4:01 pm

Colombo (News 1st) மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மகாநாயக்கர்களின் வழிநடத்தல்களை மீறி தாம் ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்கு தேவையான முன்னேற்றகரமான சிறந்த திட்டங்களுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு தேவையான புதிய சிந்தனைகளுடன் கூடிய சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்