ஏப்ரல் 21 தாக்குதல்: பரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: பரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: பரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 3:15 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், பதில் பொலிஸ் மா அதிபரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் பதில் பொலிஸ் மா அதிபரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று பாதுகாப்பு அமைச்சினதும் நீதி மற்றும் சமாதானத்திற்கான அமைச்சினதும் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக அவர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வௌியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் இன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்