அசாத் சாலியின் கருத்தால் நற்பெயருக்கு களங்கம்: சஷீந்திர ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கடிதம்

அசாத் சாலியின் கருத்தால் நற்பெயருக்கு களங்கம்: சஷீந்திர ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கடிதம்

அசாத் சாலியின் கருத்தால் நற்பெயருக்கு களங்கம்: சஷீந்திர ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 9:31 pm

Colombo (News 1st) சமல் ராஜபக்ஸவின் இரு மகன்மார் தொடர்பில் அசாத் சாலி நேற்று (20) தெரிவித்த கருத்து குறித்து சஷீந்திர ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அசாத் சாலியின் கருத்து தவறான வழிநடத்தல் செயற்பாடு என சஷீந்திர ராஜபக்ஸ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ஸவின் மகன்மாரான தாம் மற்றும் தமது சகோதரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைக்கப்படவில்லை என சஷீந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அசாத் சாலி அவ்வாறு கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மற்றும் தமது தந்தையின் நற்பெயருக்கும் தமது அரசியல் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சஷீந்திர ராஜபக்ஸவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்