தமிழ்நாட்டில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 11:51 am

Colombo (News 1st) தமிழ்நாடு – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகாக தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கேரள மாநில அரசுக்குச் சொந்தமான சொகுசு பஸ் ஒன்றும் கோவையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கனரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்