சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்கும் உத்தேச திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்கும் உத்தேச திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்கும் உத்தேச திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 5:12 pm

Colombo (News 1st) இந்த ஆண்டிற்கான சிறுபோகம் முதல் விவசாயிகளுக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர் தரத்துடனான சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்காக விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான நடைமுறை வகுக்கப்பட வேண்டும் என கடந்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் சேதனப் பசளைக்கான தரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சேதன திரவப் பசளை மற்றும் உயிரியல் உரத்திற்கான சம்பந்தப்பட்ட தரம் துரிதமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்