கோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

கோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

கோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 7:26 am

Colombo (News 1st) திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை – ஹாலியெலவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்