இந்தியன் – 2 படப்பிடிப்புத் தளத்தில் பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

இந்தியன் – 2 படப்பிடிப்புத் தளத்தில் பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

இந்தியன் – 2 படப்பிடிப்புத் தளத்தில் பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 8:01 am

Colombo (News 1st) ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 திரைப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகளின்போது பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திரைப்படத்தின் உதவி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி நடன இயக்குநர் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னைக்கு அருகில் பூந்தமல்லி நசரத்பேட்டையிலுள்ள தனியார் படப்பிடிப்புத் தளத்தில் இந்தியன் – 2 திரைப்படத்திற்கான சண்டைக் காட்சிக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சண்டைக் காட்சிகளுக்கான செட் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாரந்தூக்கிகளில் ஒன்று அறுந்து வீழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரச பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்