வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கைது

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கைது

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 10:19 am

Colombo (News 1st) பாதாள உலகக் குழுவின் தலைவரான வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியில் சிலரிடம் சந்தேகநபரால் கப்பம் பெறப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்