விமான கொள்வனவில் மோசடி: கபில சந்திரசேனவிற்கும் அவரின் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு 

விமான கொள்வனவில் மோசடி: கபில சந்திரசேனவிற்கும் அவரின் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு 

விமான கொள்வனவில் மோசடி: கபில சந்திரசேனவிற்கும் அவரின் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 5:31 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 6 ஆம் திகதி சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் வகையிலான 10 விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிட்டு நிதிதூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்