நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 9:02 am

Colombo (News 1st) நுவரெலியா – நேஸ்பி தோட்டத்தில் இரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுக்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த பெண் சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த பொதியொன்றை சோதனையிட்டபோது, பொதிக்குள்ளிருந்த மற்றுமொரு பெண் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சிசுக்களை பிரசவித்த தாய் தொடர்பில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக 14 நாட்கள் சடலங்களை நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்