by Staff Writer 19-02-2020 | 12:54 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகக்கூடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுபடுத்தப்படும் என தேசிய தேரல்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 2 ஆம் திகதிக்கும் 6 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று அறிவித்திருந்தார்.