கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 2:01 pm

Colombo (News 1st) தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் நீதிபதியில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபரூடாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரையை தமது ரீட் மனுவினூடாக இரத்து செய்யுமாறும் நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த ரீட் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்