காணி பதிவுகளை மேற்கொள்ள இலத்திரனியல் முறைமை அறிமுகம்

காணி பதிவுகளை மேற்கொள்ள இலத்திரனியல் முறைமை அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 9:34 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் காணி பதிவுகளை மேற்கொள்ளும் போது இதுவரை பின்பற்றப்பட்ட கடிதம் எழுதும் முறைமைக்கு மாற்றீடாக இலத்திரனியல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காணி பதிவு அலுவலகம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இணையத்தளத்தினூடாக நாட்டின் எந்தவொரு காணியையும் பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்