ஐக்கிய தேசிய கட்சி அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சி அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சி அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 12:46 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்னம் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடிய செயற்குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைமையகமாக சிறிகொத்தவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது.

இதன்போது, “சமகி ஜன பலவேகய” கூட்டணியில் அன்னம் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை பிற்பகல் 1.30 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்