இதுவரை 5,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

இதுவரை 5,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

இதுவரை 5,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 2:24 pm

Colombo (News 1st) வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கடந்த 29ஆம் திகதி முதல் இதுவரை 5,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,878. 2 மெட்ரிக் தொன்
முல்லைத்திவு மாவட்டத்தில் 776 மெட்ரிக் தொன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 454 மெட்ரிக் தொன்
மன்னார் மாவட்டத்தில் 782.8 மெட்ரிக் தொன்
யாழ். மாவட்டத்தில் 21.9 மெட்ரிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்