ஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

ஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

ஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Feb, 2020 | 9:35 am

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி (Ashraf Ghani) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற்று சுமார் 5 மாதங்களின் பின்னரே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் சுதந்திர தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட தகவல்களின் அடிப்படையில், அஷ்ரப் கனி 50.64 வீத வாக்குகளை பெற்றுள்ளதுடன், எதிர்தரப்பு வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா (Abdullah Abdullah) 39.52 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டெம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதுடன், கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வௌியிடப்படவிருந்தன.

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, தேர்தல்கள் முடிவுகள் தாமதமாகுவதால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வௌியாவதில் தாமதம் ஏற்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்