அமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா?

அமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா?

by Chandrasekaram Chandravadani 19-02-2020 | 3:31 PM
2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் இருவரும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தனர். இதுவொரு பழைய விடயமென்ற போதும், இந்த விடயம் தொடர்பான புதியதொரு செய்தி தற்போது பரவி வருகின்றது. விஜய் - அமலா பாலின் விவாகரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா என்ற கேள்வியொன்று தற்போது வைரலாகப் பரவி வருகின்றது. திருமணத்தின் பின்னர் படங்களில் நடித்தமையே விவாகரத்திற்கு காரணம் எனவும் அதிலும் முக்கியமாக 'அம்மா கணக்கு' பட வாய்ப்பை தனுஷ் வழங்கியமையாலேயே அமலா பால் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார் எனவும் இயக்குநர் விஜயின் தந்தை A.L. அழகப்பன் அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில் கூறியிருந்தார். ஆனால், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே விவாகரத்து செய்ததாகவும் தனது முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தனுஷ் அதற்குக் காரணமானவர் இல்லை எனவும் அமலா பால் கூறியுள்ளார். மேலும், தனது சமீபத்திய படங்கள் வௌியானதன் பின்னர் திருமணம் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அமலா ​பால் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.