English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Feb, 2020 | 6:30 am
Colombo (News 1st) Google Code-in 2019 போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் நித்தியானந்தன் மாதவன் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Google Code-in 2019 போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்விகற்கும் இந்த மாணவன் 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்களுடன் போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ஆவது ஆண்டாக நடைபெற்ற Google Code-in போட்டிகளில் அப்பர்டியம் என்ற மென்பொருள் தொடர்பில் நித்தியானந்தன் மாதவனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அப்பர்டியம் என்கின்ற மென்பொருளை மொழிபெயர்ப்பு கருவி மாதிரி Google Translate மாதிரி தான் இதுவும். அப்பர்டியம் சிறுபான்மை மொழிகளுக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட நிறுவனம். இதற்கு தான் நிழலாக்கம் செய்து கொடுத்தேன். தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்பு செய்துகொடுத்தேன். நிழலாக்க திறன்களை விருத்திசெய்ய பிழைகளை திருத்திக்கொள்ள வழியாக உள்ளது
என மாணவன் நித்தியானந்தன் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.
நித்தியானந்தனுடன் சமிந்து அமரசிங்க மற்றும் குமுதித கருணாரத்ன ஆகியோரும் வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் அடங்கியுள்ளனர்.
வெற்றியாளர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதத்தில் தமது பெற்றோர் அல்லது பொறுப்பாகவுள்ளவர்களுடன் கலிபோர்னியாவிலுள்ள கூகுள் தலைமையகத்திற்கான 4 நாட்கள் பயணம் கிட்டவுள்ளது.
புதிய உலகிற்கு இலங்கையின் கௌரவத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் மாதவனுக்கு நியூஸ்பெஸ்ட்டின் மனமார்ந்த வாழ்த்துகள்…
25 Feb, 2021 | 10:09 AM
23 Aug, 2020 | 04:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS