by Staff Writer 18-02-2020 | 3:30 PM
Colombo (News 1st) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை தொழிற்சாலையை அண்மித்த காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது.
இன்று நண்பகல் 12.40 அளவில் தீ பரவ ஆரம்பித்ததுடன், இதுவரை தீ அணைக்கப்படவில்லை
இதுவரை சுமார் 2 ஏக்கர் காட்டுப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், தீயை அணைக்க இதுவரை எவரும் வருகை தரவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
தீ தொடர்ந்தும் பரவினால், அருகிலுள்ள வீடுகளுக்கு பரவி சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் நகர சபை தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
தீயணைப்பு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவை திருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அவை திருத்தப்பட்டால் மாத்திரமே தீயணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.