கொரோனாவின் வேகம் குறைந்துள்ளது - சீனா

கொரோனாவின் வேகம் குறைந்துள்ளது - சீனா

by Staff Writer 18-02-2020 | 2:03 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸின் பரவும் வேகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை வைரஸ் வேகமாக பரவிய போதிலும், அதனுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக சீன அரசு குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம் கொரோனா வைரஸினால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000 இற்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதன்மூலம் மாத்திரம் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக தீர்மானிக்க முடியாது என உலக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 70,000 இற்கும் அதிகமானோர் தொடர்பிலான தகவல்களை சீன அதிகாரிகள் முதல்தடவையாக வௌியிடவுள்ளனர். வைரஸ் தொடர்பிலான ஆய்வுகளின் பிரகாரம் வைரஸினால் வயோதிபர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸினால் 1,868 பேர் உயிரிழந்துள்ளதுடன் 72,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.