by Staff Writer 18-02-2020 | 5:25 PM
Colombo (News 1st) கேகாலை - ரம்புக்கனை பிரதான வீதி இன்று (18) மாலை 6 மணி முதல் நாளை (19) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
குறித்த வீதியுடனான ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, நாளை மறுதினமும் (20) மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலும் கேகாலை - ரம்புக்கனை பிரதான வீதி மூடப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதிகளில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.