உதயங்கவிற்கு பிணை மறுக்கப்பட்டமைக்கான காரணங்கள்

உதயங்க வீரதுங்கவிற்கு பிணை மறுக்கப்பட்டமைக்கான முக்கிய காரணங்கள்

by Staff Writer 18-02-2020 | 9:04 PM
Colombo (News 1st) உதயங்க வீரதுங்கவிற்கு நேற்று (17) பிணை மறுக்கப்பட்டபோது சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார். இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட நட்டம் 7 பில்லியன் அமெரிக்க டொலராகும். அரசாங்கத்திற்கு 25,000 ரூபா நட்டம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் கூட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்ற நிலையில், 7 பில்லியன் டொலர் நட்டம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பதவி நிலைக்கு குறைவான அதிகாரி ஒருவர் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறியமைக்கான காரணம் என்னவென நீதவான் வினவினார். அது பொது உடைமைகள் சட்டத்தின் கீழ் கொள்ளப்படுகின்ற குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை நிரூபிப்பதற்கான அத்தியாவசிய ஆவணமான உதவி பொலிஸ் அத்தியட்சகரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழையேனும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க குற்றப்புனலனாய்வுத் திணைக்களம் தவறியமை சிக்கலாகும் என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். பொது உடைமைகளின் கீழ் வருகின்ற குற்றத்தை இழைத்துள்ளமை நிரூபணமானதாலேயே சுமார் ஐந்து வருடங்களாக விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும் சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் நீதவான் கூறியுள்ளார். எனினும், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பொது உடைமை சட்டத்தின் கீழ் வருகின்ற குற்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படாமை சிக்கலாகும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறித்த சான்றிதழை சமர்ப்பிக்காமை வழமைக்கு மாறான நிலைமையாகும் எனவும் திட்டமிட்ட வகையில் அதனை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை தெரியவருவதாகவும் நீதவான் கூறியுள்ளார். சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ​தேவையான விடயங்களை நிறைவேற்றும் வகையில் விசாரணை அதிகாரிகள் செயற்படுவதை நீதிமன்றம் அவதானித்துள்ளதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்