19ஆம் மாடியிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு

வௌ்ளவத்தையில் 19ஆம் மாடியிலிருந்து வீழ்ந்த பெண் உயிரிழப்பு

by Staff Writer 18-02-2020 | 2:00 PM
Colombo (News 1st) கொழும்பு - வெள்ளவத்தை ஹெவ்லோக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பிலிருந்து கீழே வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஹெவ்லோக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பின் 19ஆம் மாடியிலிருந்து இந்த பெண் கீழே வீழந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 41 வயதான பெண்ணொருவரே மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வௌ்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்