நாடளாவிய ரீதியில் கடலுணவு விற்பனை நிலையங்கள்

நாடளாவிய ரீதியில் கடலுணவு விற்பனை நிலையங்கள்

நாடளாவிய ரீதியில் கடலுணவு விற்பனை நிலையங்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2020 | 8:16 am

Colombo (News 1st) தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் மீண்டும் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கு தரமான கடலுணவுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலங்களில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இயக்கப்பட்டிருந்தன.

எனினும் அண்மைக் காலமாக மீன் விற்பனை நிலையங்களின் செயற்பாடுகள் கைவிடப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்