கேகாலை-ரம்புக்கனை வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது 

கேகாலை-ரம்புக்கனை வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது 

கேகாலை-ரம்புக்கனை வீதி தற்காலிகமாக மூடப்படுகிறது 

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2020 | 5:25 pm

Colombo (News 1st)  கேகாலை – ரம்புக்கனை பிரதான வீதி இன்று (18) மாலை 6 மணி முதல் நாளை (19) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

குறித்த வீதியுடனான ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, நாளை மறுதினமும் (20) மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலும் கேகாலை – ரம்புக்கனை பிரதான வீதி மூடப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதிகளில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்