ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2020 | 10:10 am

Colombo (News 1st) எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ள சின்னம் தொடர்பில் நாளை (19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு செயற்குழு நாளை கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை முற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது யானை சின்னத்திலா அல்லது அன்னம் சின்னத்திலா எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவது என்பது குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சி மற்றும் அன்னம் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்