by Staff Writer 18-02-2020 | 7:38 AM
Colombo (News 1st) அத்துருகிரிய உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றில் இன்று (18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அத்துருகிரிய, மிலேனியம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இ டங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.