5KM ஓட்டப் ​போட்டியில் Joshua Cheptege புதிய சாதனை

5 KM ஓட்டப் ​போட்டியில் உகண்டாவின் Joshua Cheptegei புதிய சாதனை

by Staff Writer 17-02-2020 | 3:41 PM
Colombo (News 1st) உகண்டாவின் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்போட்டி ஒன்றில் Joshua Cheptegei இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவ்வருடத்தில் நடத்தப்பட்ட பிரதான 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் 5 KM ஓட்டப்போட்டியில் ரஷ்யாவின் Rhonex Kipruto உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார். எவ்வாறாயினும் 12 நிமிடங்கள் 51 செக்கன்களில் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் Joshua Cheptegei உலக சம்பியனாகத்  திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.