கொரோனா உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்

உலக பொருளாதார வளர்ச்சியை கொரோனா பாதிக்கும்

by Fazlullah Mubarak 17-02-2020 | 12:07 PM

கொரோனா வைரஸ் பரவல், இந்த ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உலகப் பொருளாதாரத்தில் வைரஸினால் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் செல்லும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸினால் இதுவரை 1,770 சீனப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன், இதனால் உலக எண்ணெய் சந்தை மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் என்பன பாரிய தாக்கத்தை சந்தித்துள்ளன. சீனாவில் மாத்திரம் வைரஸ் தொற்றுக்குள்ளான 2,048 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,933 பேர் ஹூபேய் நகரில் பதிவாகியுள்ளனர்.