எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய எண்மர் கைது

எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய எண்மர் கைது

by Staff Writer 17-02-2020 | 3:10 PM
Colombo (News 1st) எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய 8 பேர், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெக்ளாஸ் தோட்டம் மேற்பிரிவில் 100 ஏக்கர் ஆற்றுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. புதையல் தோண்டுவதற்கு உதவிபுரிந்த ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், இரும்புக் கம்பிகள், ஜெனரேட்டர் மற்றும் துளையிடும் கருவிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.